Monday, January 15, 2007

தம்மிடம் சரணடையும்படி ஸ்ரீலங்கா இராணுவம் கோரிக்கை.

தம்மிடம் சரணடையும்படி ஸ்ரீலங்கா இராணுவம் கோரிக்கை. Monday, 15 January 2007 ஸ்ரீலங்காப் படைகளிடம் சரணடையும்படியான கோரிக்கை ஒன்றை ஸ்ரீலங்காவின் படைத்துறை விடுதலைப் புலி உறுப்பினர்களிடம் விடுத்துள்ளது. இதுவே இறுதிச் சந்தர்ப்பம் என்ற தலைப்பில் ஸ்ரீலங்காப் படையினர் விடுத்துள்ள கோரிக்கையில் வாகரையில் செயற்படும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் தம்மிடம் சரணடைந்து தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். வாகரையைக் கைப்பற்ற ஸ்ரீலங்கா படையினர் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் பலத்த இழப்புக்களுடன் இழுபறிப்பட்டு நிற்கும் இந்த நிலையில் தம்மையே காக்க முடியாது திண்டாடும் இலங்கை அரசும் அதன் படைகளும் இத்தகையதொரு கோரிக்கையை விடுத்திருப்பது கேலிக்குரியதாக அமைந்துள்ளது.