ஈரானுக்கு அணுவாயுத விற்பனை: சிறிலங்காவிற்கு தொடர்பு
சிறிலங்காவின் உயர்ந்த தொழிலதிபர் ஹரி ஜெயவர்த்தனா சர்வதேச அரங்கில் அணுவாயுத பேரத்தில் ஈடுபட்டு தற்போது சிறையில் உள்ள சிறிலங்காவை சேர்ந்த தொழிலதிபரான புகாரி சயீட் அபு தகீர் என்பவரிடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாகிஸ்தானின் அணுகுண்டின் தந்தை என வர்ணிக்கப்படும் கலாநிதி அப்துல் காடீர் கான் எழுதிய கடிதத்தின் மூலம் முன்னாள் அரச தலைவர் சந்திரிகாவிற்கும் ரணிலுக்கும் இந்த விடயம் தெரிந்திருந்தது எனவும் கூறப்படுகின்றது.
கானும் தகீரும் ஈரான், லிபியா, வடகொரியா பேன்றவற்றிற்கு அணுவாயுத தொழில்நுட்பத்தை வழங்கியதற்காக தற்போது அமெரிக்க புலனாய்வுத்துறையால் விசாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஜெயவர்த்தனவிற்கும் தகீருக்கும் இடையில் பல தொலைநகல் பரிமாற்றங்கள் நடைபெற்றதுடன் 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சந்திரிகாவிற்கு கான் கடிதமும் எழுதியிருந்தார். எனவே கானும் தகீரும் சில சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது மேற்குலக புலனாய்வுத்துறைக்கு தெரிவதற்கு முன்னர் ஜெயவர்த்தனவிற்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகின்றது.
தகீருக்கு ஜெயவர்த்தன எழுதிய கடிதம் ஸ்ராசன் குறூப் தொலைபன்னியூடாக அனுப்பப்பட்டதாகவும் அந்த கடிதத்திலிருந்த நீங்கள் கான் சிறிலங்காவிற்கு ஆதரவானவர் எனவும் எமது அரசியல்வாதிகளுக்கு அவரை நன்கு தெரியும் எனவும் தெரிவித்திருந்தீர்கள். நான் நீங்கள் குறிப்பிட்டவர்களுக்கு நீங்களும் கானும் துபாயில் பல வருடங்களாக என்ன வர்த்தகம் செய்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளேன் என்ற கருத்துக்கள் மூலம் இந்த சட்டவிரோத அணுவாயுத தொழில்நுட்ப விடயங்கள் சந்திரிகா அல்லது ரணிலுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது என நம்பப்படுகின்றது.
பாகிஸ்தான் பிரதம மந்திரியின் ஆலோசகர் என்ற முறையில் கான் அன்றைய பாகிஸ்தானுக்கான சிறிலங்கா தூதுவர் லெப். ஜெனரல் சிறீலரல் வீரசூரியா மூலம் எழுதிய கடிதத்தால் அரச தலைவர் சந்திரிகாவும் பிரதமர் ரணிலும் இந்த விடயங்கள் தெரிந்திருந்தும் எந்த நடவடிக்கையையும் எடுக்க முயற்சிக்கவில்லை.
அமெரிக்க புலனாய்வுத்துறை தகீர் தொடர்பாக சிறிலங்கா காவல்துறையிடம் தகவல்களைப் பெற முயற்சிப்பதாகவும். அவர்கள் தகீர் தொடர்பான என்ன தகவல்களை பெற்றார்கள் என தான் அறிவிப்பதாக இருந்தால் தனக்கு 2 மில்லியன் டொலர்கள் தகீர் தரவேண்டும் என ஜெயவர்த்தன கேட்டிருந்தார்.
இறுதியில் ஜெயவர்த்தனவின் வேண்டுகோளுக்கு இணங்கிய தகீர் 1.7 மில்லியன் டொலர்களை ஹற்றன் நசனல் வங்கிக்கு அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Sunday, January 14, 2007
ஈரானுக்கு அணுவாயுத விற்பனை: சிறிலங்காவிற்கு தொடர்பு
Sunday, January 14, 2007





