களுவாஞ்சிக்குடியில் துணை இராணுவக்குழு உறுப்பினர் சுட்டுக்கொலை மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறிலங்கா இராணுவ துணைக்குழுவான கருணா குழுவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். களுவாஞ்சிக்குடி மகிழுரில் இன்று புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் உருந்துருளியில் வந்தவர்கள் கருணா குழுவினரை பின்தொடர்ந்து சென்று துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு தப்பியோடியதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.





