Wednesday, January 10, 2007

துணை இராணுவக்குழுவினரின் முகாம்கள் மீது தாக்குதல்:

(2 ஆம் இணைப்பு) வாழைச்சேனையில் துணை இராணுவக்குழுவினரின் முகாம்கள் மீது தாக்குதல்: 10 பேர் பலி மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையில் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினர் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டது. சிறிலங்கா அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியான வாழைச்சேனையில் இயங்கி வந்த துணை இராணுவக்குழுவினரின் இரு முகாம்கள் மீது நேற்றிரவு செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் துணை இராணுவக்குழுவினரான கருணா குழுவினர் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பு மற்றும் விநாயகபுரம் பகுதியில் 400 மீற்றர் இடைவெளியில் அமைந்திருந்த துணை இராணுவக்குழுவினரின் இரு முகாம்கள் மீது முச்சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த துணை இராணுவக்குழுவினர்களில் மூவர் வாழைச்சேனை மருத்துவமனைக்கும் ஒருவர் பொலநறுவை மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்ட போதும் பின்னர் வாழைச்சேனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூவரையும் இராணுவத்தினர், பொலநறுவை மருத்துவமனைக்கு நோயாளர் காவு வாகனத்தில் எடுத்து கொண்டு சென்றனர். தாக்குதல்களுக்கு உள்ள இரு முகாம்களிலும் 25-க்கும் மேற்பட்ட துணை இராணுவக் குழுவினர் இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.