Tuesday, January 09, 2007

ஒரு பல்குழல் ஏவுகணை குண்டுத் தாக்குதல் நடாத்த

ஒரு பல்குழல் ஏவுகணை குண்டுத் தாக்குதல் நடாத்த 100 சிங்களவர் வேலையற்றவர்கள் ஆகின்றார்கள் இலங்கையில் தற்பொழுது நடைபெற்றுவரும் யுத்தம் காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதுகாப்பிற்காக செலவிடப்படும் தொகை பன்மடங்காக அதிகரித்து வருவதால் நாடு தாங்க முடியாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். கடந்த வருடத்தை விட இந்த வருடம் பாதுகாப்புச் செலவீனம் 28 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்த அவர் 2008ம் ஆண்டு பாதுகாப்பு் செலவீனம் 143.46 பில்லியன் ரூபாயவத் தாண்டிவிடும் அளவிற்கு நிலமை கட்டுமீறிப் போகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் ‘ஸ்ரீலங்காப் படையினர் புலிகள் மீது மேற்கொண்டு வரும் பல் குழல் ஏவுகணைத் தாக்குதலையிட்டு எம்மில் பலர் புளகாங்கிதம் அடைந்து வருகின்றார்கள். ஆனால் ஒரு பல்குழல் ஏவுகணை குண்டுத் தாக்குதலை நடாத்தும் பொழுது ஏற்படும் செலவினால் 100 இலங்கையர்கள் வேலையற்றவர்கள் ஆகின்றார்கள் என்று நாம் உணர்ந்து கொள்வதில்லை’ என அவர் தெரிவித்துள்ளார்.