வெருகலை நோக்கி படையினர் எறிகணைத் தாக்குதல்: ஒருவர் பலி- 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் காயம் திருகோணமலை மாவட்டம் வெருகல் சூரநகர்ப் பகுதியை நோக்கி சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இரு சிறுவர்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 10.45 மணியளவில் இடம்பெற்றது. ஈச்சிலம்பற்றுப் பகுதியிலிருந்து வாகரைக்கு இடம்பெயர்ந்திருந்த பொதுமக்களில் 550 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மீண்டும் ஈச்சிலம்பற்றுப் பகுதிக்குச் சென்றிருந்த நிலையில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கதிரவெளி மற்றும் வாகரைப் பகுதியில் உணவுத் தட்டுப்பாடு தொடர்வதாலும் தொடர் மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதனாலும் வாகரையை நோக்கி தொடர்ந்தும் படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதனால் பொதுமக்கள் மீண்டும் ஈச்சிலம்பற்றுப் பகுதிக்கு இடம்பெயர்ந்திருந்தனர். எறிகணை வீச்சில் கொல்லப்பட்டவர் கந்தையா கணேசன் (வயது 35) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். பாக்கியராசா சந்திரன் (வயது32) காத்தமுத்து திரௌபதை (வயது 28) சந்திரன் வசந்தி (வயது 30) கணேசன் யேசு (வயது 06) தயாபரன் மதுசா (வயது 02) ஆகியோர் காயமடைந்த நிலையில் வாகரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதினம்.கொம்.





