Monday, January 08, 2007

கொல்லப்பட்டவர்களுக்காக ஆனந்தசங்கரி ஒப்பாரி.

தென்பகுதியில் பஸ் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்களுக்காக ஆனந்தசங்கரி ஒப்பாரி. தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்காப் படையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் படுகொலைகளையும் விமானக் குண்டு வீச்சுக்களையும் கண்டிக்காதவரும் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்காக ஒரு அனுதாபச் செய்தியைக் கூட வெளியிடாதவருமான திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள் தென்பகுதியில் பஸ் குண்டுவெடிப்பில் படுகொலையான சிங்களவர்களுக்காக பலத்த கண்டணத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக த.வி.கூ தலவைர் ஆனந்தசங்கரி அவர்கள் தென்பகுதி ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு இன்று வழங்கியுள்ள செவ்வியில் இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகளே மேற்கொண்டதாக தெரிவித்ததுடன் தனது பலத்த கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார். வாங்கிய விருதுக்கும் டொலருக்கும் ஐயா சங்கரி நன்றியைத் தெரிவிப்பதை இக்கண்டனமானது உணர்த்துகிறது.