தனிமையில் வசித்தவர் சுட்டுக் கொலை கோப்பாய் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு, தனிமையில் வசித்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கோப்பாய், கைதடி - மானிப்பாய் வீதியில் தனது வீட்டில் தனிமையிலிருந்த கந்தையா ரவீந்திரன் (45 வயது) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார். இவரது வீட்டிற்கு இரவு 8 மணியளவில் மோட்டார் சைக்கிளொன்றில் சென்றவர்களே இவரைச் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து நேற்றுக் காலை அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை கைப்பற்றி யாழ். ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.





