கொழும்பு குண்டு வெடிப்புகளிற்கும் புலிகளிற்கும் எந்ததொடர்பும் இல்லை-இளந்திரையன்.
கொழும்பு புறநகர் பகுதியிலும் காலியிலும் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் எந்த விததொடர்பும் இல்லை என புலிகளின் இராணுவப்பேச்சாளர் இ.இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நேற்றும் இன்றும் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல்களிற்கு புலிகளே காரணம் என்று சிறீலங்கா அரசு குற்றம் சாட்டி வருகின்றது இதில் எந்த உண்மையும் இல்லை புலிகளிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்குடன் எந்த விதஆதாரங்களும் அற்ற நிலையில் இவ்வாறன குற்றச்சாட்டுக்களை சிறீலங்கா அரசு முன்வைப்பதாகவும்...
தமிழீழ தாயகப் பகுதியில் தொடர்ச்சியான முறையில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்படும் மிகக்கொடுரமான மானிட குற்றச்செயலிற்கு காரணியாக விளங்கும் சிறீலங்கா அரசு புலிகளிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்குடன் செயற்பட்டு வருவதாக இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார்.
Saturday, January 06, 2007
கொழும்பு குண்டு வெடிப்புகளிற்கும் புலிகளிற்கும்....
Saturday, January 06, 2007





