கொழும்பு தமிழர் புனர் வாழ்வுக்கழக அலுவலகமும் சிறீலங்கா பொலிசாரால் சோதனை
சிறீலங்கா காவல்துறையினர் தமிழர்புனர்வாழ்வுக் கழகத்தின் கொழும்பு பணிமனையை எந்தவித சட்ட ஆவணங்கள் எதுவும் காண்பிக்காமல் தேடுதலுக்கு உட்படுத்திதாகவும் அங்கு பணிபுரிந்த பணியாளர்களின் முகவரி போன்ற விபரங்களை கேட்டறிந்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா, திருகோணமலை புனர்வாழ்வு கழக அலுவலகங்கள் தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டமை தெரிந்ததே.
இவ்வாறாக தொடர்ந்து சிறீலங்கா படையினர் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மீது மேற்கொள்ளும் அடாவடித்தனங்கள் வடகிழக்கு பகுதியில் வாழும் அப்பாவிப் பொதுமக்களுக்கு மனிதாபிமான பணிகளை மேற்கொள்வதில் எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்தும் என தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் ஊடக செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
Saturday, January 06, 2007
கொழும்பு தமிழர் புனர் வாழ்வுக்கழக அலுவலகமும்..
Saturday, January 06, 2007





