Sunday, January 07, 2007

பாக்கு நீரிணையில் 50 ரொக்கட் ஷெல்கள்

பாக்கு நீரிணையில் 50 ரொக்கட் ஷெல்கள் தமிழ்நாடு கரையோரப் பகுதிக்கு அப்பால் பாக்கு நீரிணையிலிருந்து கடந்த 15 நாட்களில் மட்டும் 50 ரொக்கெட் ஷெல்கள் மீனவர்களின் வலையில் சிக்கியிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் ஜேர்மன் நாடுகளில் தயாரிக்கப்படும் ஷெல்களே மரப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் அகப்பட்டுள்ளன. இவையனைத்தும் இலங்கை போராளிகளினால் கைவிட்டுச் சென்றிருக்கலாமென நம்பப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். ஷெல்களை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வேளையில் தமிழ்நாடு கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் கண்டதையடுத்து, போராளிகள் அவற்றை கைவிட்டுச் சென்றிருக்கலாமென சந்தேகிப்பதாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். குறித்த 50 ஷெல்களும் கடற்படை அல்லது இராணுவத்தின் உதவியுடன் செயலிழக்கச் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் நீரூக்கடியில் இன்னும் பெருந்தொகையான ரொக்கெட் ஷெல்கள் இருக்கலாமெனவும் அவற்றை தேடியறிய அரசாங்கம் விஷேட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் மீனவர்கள் அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, கடந்த டிசம்பர் மாதத்திலும் இந்திய கடற்படையினராலும் கடலோரப் பாதுகாப்பு பிரிவினராலும் இவ்வாறான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.