உடுவிலில் கிளைமோர் தாக்குதல்
இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் உடுவில் அராணுவ முகாமிற்கு அருகாமையில் வெடிக்கவைக்கப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 1 இராணுவத்தினர் காயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில் இக்கிளைமோர் குண்டானது சிறீலங்கா இராணுவத்தினரால் நடாத்தப்படும் கடை உன்றின் முன்பாக பொருத்தப்பட்டிருந்ததாகவும் காயமடைந்த இராணுவத்தினர் பலாலி மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் அறியமுடிகிறது.
கச்சேரி நல்லூர் வீதியில் காலை 8.50 மணியளவில் மற்றொரு வெடிப்பு சம்பவத்தில் பொதுமக்கள் இருவர் காயமடைந்தள்ளனர். இவர்கள் 24 அகவையுடைய துலோசினி எனவும் மற்றயவர் ஒர் வயோதிப பெண்மணி எனவும் யாழ்பான ஆசிரியர் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Saturday, January 06, 2007
உடுவிலில் கிளைமோர் தாக்குதல்
Saturday, January 06, 2007





