Saturday, January 06, 2007

காலியில் குண்டுவெடிப்பு: 15 பேர் பலி- 40 பேர் காயம்

கிக்கடுவ சீனிகம பகுதியில் பஸ்ஸில் குண்டு வெடிப்பு 15 பேர் கொல்லப்பட்டனர் : 42 பேர் காயம் கொழும்பில் இருந்து காலி நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் வண்டியொன்றில் இன்று பிற்பகல் இரண்டரை மணியளவில் குண்டு வெடித்தமையினால் 15 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 42 பேர் வரை காயப்பட்டுள்ளனர் என அம்பலாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார். கிக்கடுவ சீனிகம தேவாலயத்திற்க்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பிரதிபணிபாளர் ஷெல்றன் பெரேரா தெரிவித்துள்ளார். கடந்த 24 மணித்தளங்களுக்குள் நடந்த இரண்டாவது பஸ் குண்டு வெடிப்பு சம்பவம் இதுவாகும்.

சந்தேக படும் ரீதியில் பெண்ணொருவர் குண்டினை வெடிக்க வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பின் 85KM தெற்கே உள்ள சீனிகம இடத்தில் இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பு தாக்குதலே என அம்பலாங்கொடை பொலிஸ் அதிகாரி உபுல் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இப்பொழுது 15 உடல்கள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துசெல்லப்பட்டும் மேலும் காயமடைந்த 40க்கு மேற்பட்டவர்கள் 2 வேறு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

60 பேர் வரை பயணஞ் செய்து கொண்டிருந்த இந்த பஸ் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டு அதில் பலியானவர்களும் காயப்பட்டவர்களும் சம்பவம் நடைபெற்ற பின்னர் பொதுமக்கள் உதவியொடு மீட்க்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டும் அந்த பகுதி போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது. கொழும்பு காலி போக்குவரத்து பாதைகள் மாற்று வழியில் செயற்படுத்தபட்டுள்ளதாகவும் தெரிவிக்கிப்படுகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுவருகின்றனர். சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.