Friday, January 05, 2007

திருமலை கிளைமோர் தாக்குதலில் இரு கடற்படையினர் படுகாயம்

திருமலை கிளைமோர் தாக்குதலில் இரு கடற்படையினர் படுகாயம் திருகோணமலையில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு சிறிலங்கா கடற்படையினர் படுகாயமடைந்துள்ளனர். திருகோணமலை உப்புவெளி வீதியில் அலெஸ் தோட்டப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.15 மணிக்கு அடையாளம் தெரியாத நபர்களால் இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.