Friday, January 05, 2007

சிறீலங்கா இராணுவத்தின் அட்டுழியம்

வவுனியா தமிழர்புனர்வாழ்வுக்கழகத்தில் சிறீலங்கா இராணுவத்தின் அட்டுழியம் தமிழர் புனர்வாழ்வுக்கழக வவுனியா அலுவலகத்தை சிறீலங்கா இராணுவம் சுற்றிவளைத்து அங்கு பணிபுரிந்த அனைவரையும் கைதுசெய்துள்ளது. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் வவுனியா குருமன்காடு தமிழர்புனர்வாழ்வுக்கழக அலுவலகமே இவ்அடாவடித்தனத்துக்கு உட்பட்டுள்ளதாகவும் அதில் பணிபுரிந்த நிர்வாக உத்தியோகஸ்தர் சத்தியமூர்த்தி, பி. தேவராஐ, கணக்காளர் நிரோசா, அலுவலக உதவியாளர் பிரியா ஆகியோரை கைதுசெய்துள்ளதாகவும் அவர்களது அலுவலக உடமைகள் யாவும் இராணுவத்தால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.