Wednesday, January 10, 2007

மட்டக்களப்பில் கருணா கும்பலின் முகாம் மீது தாக்குதல்

மட்டக்களப்பில் கருணா கும்பலின் முகாம் மீது தாக்குதல் மட்டக்களப்பு கல்லடி உயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் அமைந்திருந்த கருணா ஒட்டுக்கூலிக்குழுவின் அலுவலகம் நேற்று இரவு புதன்கிழமை 11.20 மணியளவில் தாக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து கிடைத்த ஆரம்ப கட்ட தகவலின்படி 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களை மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை கடந்த செவ்வாய்கிழமை மட்டக்களப்பிற்கு வடக்காக வாழைச்சேனைப்பகுதியில் அமைந்திருந்த இருமுகாம்கள் தாக்கியழிக்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.