கிழக்கை முற்றாக மீட்ட பின்னர் பொதுத் தேர்தலை நடத்தத் திட்டம் (த பினான் ஸியல் டைம்ஸ் -கட்டுரை) [Wednesday January 10 2007 [uthayan.com] கிழக்கில் புலிகளைத் தோற்கடித்து, அந்த மாகாணத்தை முற்றாக விடுவித்த பின் னர், அதனால் கிடைக்கும் அரசியல் செல் வாக்கைப் பயன்படுத்தி, நாட்டில் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தவும், யுத்த வெற்றி களைத் தமது அரசியல் நிலைமையை ஸ்தி ரப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்தவும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டிருக்கின்றார் எனத் தெரிகின்றது. லண்டனிலிருந்து வெளியாகும் த பினான் ஸியல் டைம்ஸ் பத்திரிகையில் ஜோ லேகி என்பவர் வரைந்த அரசியல் கட்டுரையில் இவ்வாறு மதிப்பாய்வு செய்யப்பட்டிருக் கின்றது. அக்கட்டுரையின் முக்கிய சாராம் சங்கள் வருமாறு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது வெற்றிக்குத் தாமே இரையாகும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியவராகியிருக்கின்றார். 2005 இல் தாம் பதவியேற்ற நாள் முதல் தமிழ்ப் புலிக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதி ராகக் கடும் நிலைப்பாட்டையே அவர் பின் பற்றி வந்துள்ளார். கிழக்கில் புலிகளின் பல மான பிடியிலிருந்து அவர்களை வெளியேற்றும் அளவுக்கு முன்னேறியுள்ள அரச படைகள், இப்போது புலிகளின் வடக்கு நிலைகள் மீதும் தாக்குதல் தொடுக்கத் தயாராகி வருகின்றன. ஆனால் கடந்த வாரம் தெற்கில் சிவிலியன்கள் உயிரிழக்கக் காரணமான பயங்கரவாதி களின் இரு குண்டுவெடிப்புத் தாக்குதல் களை அடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தமது பிரதே சங்களை இழந்து வரும் இன்றைய நிலைமை யில் சிவிலியன்களுக்கு எதிரான எழுந்த மானமான தமது பழைய தாக்குதல் தந்தி ரோபாயத்தை அவர்கள் மீள ஆரம்பித்து விட்டார்களோ என்ற எண்ணம் கொழும்பில் பரவலாக ஏற்பட்டிருக்கின்றது. எதனைச் செய்வது என்ற இக்கட்டில் இதனால், ஜனாதிபதி குழப்ப நிலையை எதிர்கொள்கின்றார். இராணுவத்தைக் கட் டுப்படுத்தி, விடுதலைப் புலிகளுடன் பேச்சு மேசைக்குத் திரும்புவதன் மூலம் தமது தேசியப் போக்கு ஆதரவாளர்களுடனான உறவிலிருந்து விலகிப் போவதா? அல்லது பதிலடியாக இரா ணுவ நடவடிக்கை களைத் தீவிரப்படுத்தி நாட்டைப் பெருங் குழப்பத்துக்குள் ஆழ்த்துவதா? என் பதைத் தீர்மானிக்க வேண்டிய இக்கட்டு அவருக்கு. இராணுவ மோதல்கள் விரிவடைவதால் நேரக்கூடிய ஆபத்துக்களை ஜனா திபதி அறிவார். ஆனால், இப்போது தேசி யப் போக்குக் கூட்டணியின் சிறைக் கைதியாக அவர் இருப்பதுதான் அவரது பிரச் சினையாகும். என்று கூறுகிறார் பக்கச் சார்பற்ற அமைப்பான தேசிய சமாதானப் பேரவையின் இயக்குநர் ஜெஹான் பெரேரா. யுத்தத்தைப் நோக்கி வழுக்கிச் செல்கிறது 2002 இல் யுத்த நிறுத்த ஒப்பந்தம் கைச் சாத்தாகிய பின்னர் இலங்கை இப்போது முழு அளவிலான யுத்தத்தை நோக்கி வழுக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. கடந்த வருடத்தில் பல தற்கொலைத் தாக்குதல்கள் இடம்பெற்றன. அரசு பதி லடிக்கு பல விமானத் தாக்கு தல்களை நடத்தியது. கடந்த வாரம் அத்தகைய தாக் குதல் ஒன்றில் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த 16 சிவிலி யன்கள் கொல்லப்பட்டனர் எனப் புலிகள் கூறுகின்றனர். ஜெனிவாப் பேச்சுகள் பயன் தராமல் முடிவுற்றன. சுதந்திரத்துக்கான போராட்டத்தை மீள ஆரம்பிக்கப் போகின்றோம் எனப் புலி களின் தலைவர் வே. பிரபாகரன் விடுத்த அறிவிப்பு, ஏறத்தாழ யுத்தப் பிரகடன மாகவே கருதப்படுகின்றது. இரண்டு தரப்பும் இராணுவத் தெரிவை நாடும் நிலையில் யுத்த நிறுத்தத்தின் பின் னர் இப்போதுதான் முதல் தடவையாக அரசுப் படைகளின் கைகள் ஓங்கியுள் ளன. அதற்குப் புலிகளில் ஏற்பட்ட பிளவும் அரசுப் படைகளுக்குச் சாதகமாக உதவி யுள்ளது. அரச படைகளுக்கு சவாலாகவே இருக்கும் ஆனால், கிழக்கில் படைத் தரப்புக்குக் கிடைக்கும் வெற்றி, இரண்டு பக்கமும் கூரான வாள் போன்றதே. புலிகளின் கட்டுப் பாட்டிலிருந்து கிழக்கை விடுவித்தாலும் கூட, தற்கொலைத் தாக்குதலாளிகள் உட்பட கரந்தடித் தாக்குதலுக்குத் தயாரான பெருமளவு விடுதலைப் புலிகளைக் கொண்டிருக்கக் கூடிய பரந்த அப்பிர தேசத்தைப் பாதுகாப்பது என்பது அரசுப் படைகளுக்குப் பெரும் சவாலாக இருக்கும். மறுபுறத்தில் இலங்கையின் பொருளா தாரம் மோசமான வீழ்ச்சி நிலையை நோக் கிச் செல்கிறது. முழு அளவில் போர் வெடிக்குமானால் அதன் நிலையைக் கூறவே தேவையில்லை. இப்பிரச்சினைகளிலிருந்து வெளிப்படு வதற்கு சர்வகட்சிப் பிரதிநிதிகள் மாநாடு மற்றும் அதன் சிபார்சுகளை லாவகமாக ஜனாதிபதி பயன்படுத்த எத் தனிக்கலாம். நாட்டின் பெரும்பான்மையினரான சிங்களவர்கள் மத்தியில் இருக்கின்ற கடும்போக்குத் தேசியவாதிகள், இந்தச் சிபார்சுகளைக் கடுமையாக எதிர்த்தா லும், அவற்றில் சிலவற்றையேனும் பிர தான எதிர்க்கட்சியான ஐ.தே.கவின் ஆதர வுடன் ஜனாதிபதியால் முன்னெடுக்க முடி யும். யுத்தத்தின் பெறுபேறை அரசியல் இலா பமாக மாற்றிக் கொள்ளலாமா என்பது குறித்து ஜனாதிபதி இன்னும் முடிவு எடுக் காமல் இருக்கக் கூடும். கிழக்கில் இராணுவம் வென்றால் முத லில் அங்கு பிராந்தியத் தேர்தலை அரசு நடத்தலாம். பின்னர் பெரும்பாலும் பொதுத் தேர்தலும் நடக்கும். கிழக்கில் கிடைக்கக் கூடிய வெற்றி, ஜனாதிபதிக்கு தேர்தல் ரீதியாகவும், அர சியல் ரீதியாகவும் தனது நிலையை ஸ்திரப் படுத்திக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கும். என்று கணிக்கிறார் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலை யத்தின் நிறை வேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து. இப்படி அந்த ஆய்வுக் கட்டுரை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





