Thursday, January 11, 2007

சிலாபம், களுத்துறைப்பகுதியில் 49 தமிழ் இளைஞர்கள் ...

சிலாபம், களுத்துறைப்பகுதியில் 49 தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் கடந்த செவ்வாய் இரவு, மற்றும் புதன்கிழமை காலை சிறீலங்கா பாதுகாப்பு படையினர் மேற்கு , வடமேற்கு மாகாணங்களில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டார்கள். மேற்கு மாகாணத்தில் களுத்துறை, பண்டாரகம ஆகிய பகுதியகளில் காங்கேசன்துறை, அக்கரைப்பற்று, போகந்தலாவ ஆகிய பிரதேசங்களை வதிவிடமாக கொண்ட நகைகடைகளில் வேலை பார்க்கும் 31 தமிழ் இளைஞர்களும் வடமேற்கு மாகாணத்தில் சிலாபம் மாவட்டத்தில் உடப்பு கிராமத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் அகிய பகுதிகளை வதிவிடமாக கொண்ட 18 தமிழ் இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.