அம்பாறை அதிரடிப்படையினருக்கு பாரிய இழப்பு. அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு பகுதியை நோக்கி முன்னேற முயன்ற விசேட அதிரடிப்படையினரைவழிமறித்து விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் விசேடஅதிரடிப்படையினர் பலர்காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாரியஅளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கையில் விடுதலைப்புலிகளின்ஸ்ரான்லி முகாமை தாக்கி அங்கிருந்த பொருட்களை எடுத்து சென்றதாக ஸ்ரீலங்கா பாதுகாப்புஅமைச்சு வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னேற்ற முயற்சி முறியடிக்கப்பட்டதுடன் விசேட அதிரடிப்படையினர் பாரிய இழப்புக்களுடன்காயமடைந்தவர்களையும் தூக்கிக்கொண்டு பின்வாங்கி ஓடியதாக அங்கிருந்து கிடைக்கும்செய்திகள் தெரிவிக்கின்றன





