முகமாலை முன்னரங்க நிலைகளில் எறிகணை மோதல்கள் 8 இராணுவம் காயம்
நேற்று புதன் கிழமை சிறீலங்கா இராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே தென்மராட்சி முகமாலை முன்னரங்க நிலைகளில் எறிகணைமோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இத்தாக்குதலில் 8 சிறீலங்கா படையினர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குடிசார் தகவலின்படி நேற்று காலை முதல் தொடர் துப்பாக்கி சூட்டுச்சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்ததாக அறியமுடிகிறது.
இதேவேளை யாழ்பாணம் கூழாவடி ஆணைக்கோட்டைப்பகுதியில் சிறீலங்கா தொடரணியை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஒரு இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாக குடிசார்தகவல்கள் தெரிவிக்கின்றன.
Thursday, January 11, 2007
முகமாலை முன்னரங்க நிலைகளில் எறிகணை மோதல்கள் 8 ...
Thursday, January 11, 2007





