Thursday, January 11, 2007

கொழும்பில் 44 தமிழர்கள் கைது

கொழும்பில் 44 தமிழர்கள் கைது கொழும்பு, கல்கிசை பகுதிகளில் சிறீலங்கா இராணுவத்தாலும் காவல்துறையாலும் கடந்த செவ்வாய் இரவு மற்றும் புதன் காலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் 44 தமிழ்மக்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். அண்மையில் கல்கிசைப்பகுதிகளில் வசிக்கத்தொடங்கிய மக்களில் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த போதுமான தகவல் இல்லாதவர்களை கைது செய்ததாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை மட்டக்குழிய பகுதியில் மற்றொரு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் கைது செய்யப்பட்டோர் விபரம் அறியப்படவில்லை எனவும் அறியமுடிகிறது.