Wednesday, January 17, 2007

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 4 உறுப்பினர்கள் அரசில்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 4 உறுப்பினர்கள் அரசில் இணைய ஆர்வம்: கேகலிய ரம்புக்வெல [புதன்கிழமை, 17 சனவரி 2007] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா அரசாங்கத்தில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசில் இணைய ஆர்வம் கொண்டுள்ள 18 ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் நடைபெறுகின்றது. அவர்கள் அரச தலைவருக்கு உதவுவதற்கு முன்வந்துள்ளனர். முஸ்லிம் காங்கிரசும் அரசில் இணையும் தனது விருப்பத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளது. இவை தான் தற்போது எம்மிடம் உள்ள தகவல்கள். இதன் முடிவுகள் அடுத்து வரும் சில வாரங்களில் தெரிய வரும். இந்த அரசியல் கட்சிகள் அரசுக்கு உதவுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினாலும் அரசினாலும் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தடையாக இருக்கப்போவதில்லை என்றார் அவர்.