வவுனியா கிளைமோர் தாக்குதலில் 2 சிறிலங்கா காவல்துறையினர் பலி
[செவ்வாய்க்கிழமை, 16 சனவரி 2007]
வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் மீது நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
வவுனியா கச்சேரி வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் வாகனமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் மூலமே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்தை சிறிலங்காப் படையினரும் சிறப்பு அதிரடிப்படையினரும் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.
கொல்லப்பட்ட இரு காவல்துறையினர் ஜானக மற்றும் கீர்த்திசிறி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இரு காவல்துறையினரின் சடலங்களும் வவுனியா மருத்துவமனை பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளது.
Tuesday, January 16, 2007
வவுனியா கிளைமோர் தாக்குதலில் 2 சிறிலங்கா....
Tuesday, January 16, 2007





