Friday, January 19, 2007

அதிரடிப்படையினரின் முகாம் மீது தாக்குதல்: 10 படையினர் பலி-

அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாம் மீது தாக்குதல்: 10 படையினர் பலி- 10 படையினர் காயம் [வெள்ளிக்கிழமை, 19 சனவரி 2007] அம்பாறையில் கஞ்சிக்குடிச்சாறை ஆக்கிரமித்துள்ள சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் 'நியத்த ஜய' ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் வழங்கல் செயற்பாட்டு முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 10 சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10-க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். நகர்வை மேற்கொண்டுள்ள படையினருக்கு வழங்கலை மேற்கொள்வதற்காக கஞ்சிகுடிச்சாறு வக்கிமுட்டியா பகுதியில் அதிரடிப்படையினர் அமைத்துள்ள முகாம் மீது இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 10.45 மணிக்கு விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குகுதலில் 10 சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10-க்கும் மேற்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளனர். சிறப்பு அதிரடிப்படையினர் படையினர் மீது கிளைமோர் தாக்குதலும் நேரடித் தாக்குதலும் விடுதலைப் புலிகள் நடத்தியுள்ளனர். கஞ்சிகுடிச்சாறுப் பகுதியில் கஞ்சிகுடிச்சாறு, ரூபஸ், விகாரைமலைப் பகுதிகளில் சிறப்பு அதிரடிப்படையினர் ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ளனர்.