இலங்கைக்கு உதவி செய்ய வேண்டாம்: மேற்குலகிடம் ஜேர்மன் கோரிக்கை
சமாதான முயற்சிகளை முன்னெடுக்கும் வரை இலங்கைக்கான உதவிகள் அனைத்தையும் இடைநிறுத்துமாறு ஜேர்மனியின் அபிவிருத்தி அமைச்சர் கெடிமாரி வியொக்சொரெக் சியோல் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய பேட்டி:
ஆழிப்பேரலை பேரழிவு தொடர்பாக ஆசியாவில் 2 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பலியாகினர். அதில் இலங்கையும் பாரிய பாதிப்பை அடைந்தது.
சிறிலங்கா அரசுக்கு புதிய வாக்குறுதிகளை வழங்குவதை ஜேர்மன் அரசு நிறுத்தியுள்ளது. இதனையே ஏனைய மேற்குலக அரசுகள் கடைப்பிடித்தால் நல்லது. மீண்டும் ஆரம்பித்துள்ள உள்நாட்டு யுத்தம் காரணமாக தமிழ் மக்களின் பிரதேசங்களில் சண்டை இடம்பெறுகின்றது. இதனால் புதிய நிதி ஒதுக்கீடு எவையும் செய்யப்படவில்லை.
வீடமைப்பு மற்றும் கல்வி திட்டங்களுக்காக சிறிலங்காவுக்கு வழங்க திட்டமிட்டிருந்த 19 மில்லியன் யூரோவை இந்தேனோசியாவின் ஆச்சே மாகாணத்திற்கு வழங்கியுள்ளோம் என்றார் அவர்.
Sunday, December 24, 2006
இலங்கைக்கு உதவி செய்ய வேண்டாம்: மேற்குலகிடம் ஜேர்மன்
Sunday, December 24, 2006





