Wednesday, December 20, 2006

"தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் இறுதி நிகழ்வு.

இன்று "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் இறுதி நிகழ்வு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும் தத்துவாசிரியருமான "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கத்தின் இறுதி நிகழ்வுகள் இன்று புதன்கிழமை லண்டனில் நடைபெறவுள்ளன. கடந்த பல மாதங்களாக புற்று நோயினால் அவதியுற்று வந்த "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் கடந்த வியாழக்கிழமை (14.12.06) லண்டனிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். பிரித்தானிய நேரப்படி இன்று காலை 8 மணிமுதல் மாலை 3 மணிவரை தேசத்தின் குரலின் புகழுடல் அலெக்சாண்ட்றா மாளிகையில் இறுதி வணக்கத்துக்காக வைக்கப்பட்டு புகழுடல் தகனம் செய்யப்படவுள்ளளது. இறுதி நிகழ்வுகளில் கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே, டென்மார்க், பின்லாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலுள்ள புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் அரசியல் தலைவர்களும் இராஜதந்திரிகளும் கலந்து கொண்டு தமது இறுதி வணக்கத்தை செலுத்தவுள்ளனர். இறுதி வணக்க நிகழ்வு நடைபெறவுள்ள அலெக்சாண்ட்றா மாளிகையானது, Alexandra Palace Alexandra Palace Way Wood Green London N22 7AY என்ற முகவரியில் அமைந்துள்ளது.