Tuesday, December 12, 2006

ஐக்கிய நாடுகள் சபைக்கு அவசர வேண்டுகோள்...

தமிழ்மக்களைப் பட்டினிச்சாவிலிருந்தும் அரச பயங்கரவாதப் படுகொலைகளிலிருந்தும் பாதுகாக்குமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வாகரையில் அரசாங்கம் நடத்திவரும் படுகொலைகளைக் கண்டித்தும் ஏ9 வீதி மூடப்பட்டுள்ளதால் உண்டாகியுள்ள மனி தப் பேரவலத்துக்குக் கண்டனம் தெரிவித் தும் ஐக்கிய நாடுகள் சபைக்கு விலாசமிட்டு கிளிநொச்சி வெகுசன அமைப்புகளின் ஒன் றியம் கையளித்த மகஜரிலேயே மேற்கண்ட அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மகஜரில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவதுசிறிலங்காவில் தமிழ் பேசும் மக்கள் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட இன அழிப்பில் வன்முறை கள் ஜெனிவா இரண்டு சமாதானப் பேச்சு வார்த்தைக்குப் பின்னர் மிக அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருவது தங்கள் சமூகம் நன்கு அறியும். வெளிப்படையாகவே அரச பயங்கரவாத நடவடிக்கைகள் அரங்கேறி வருகின்றன. சர்வதேச சமூகத்தின் விரும் புகளையும்இ எதிர்பார்ப்புக்களையும் புறந் தள்ளி விட்டு சிறிலங்கா அரசாங்கத் தில் திட்டமிட்ட தமிழ் மக்கள் மீதான படு கொலைச் செயற்பாடுகள் ஊக்கமளிக் கப் பட்டு முழு அளவில் வளர்க்கப்பட்டு உச்ச வடிவெடுத்துள்ளது. அதன் வெளிப்பாடாக கடந்த 8.12.2006 தொடக்கம் தமிழீழத்தின் வாகரைப் பகுதி யில் சிறிலங்கா அரசின் எறிகணைத் தாக் குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் பேசும் மக்கள் படுகொலை செய்யப்பட்டு ள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயப்படுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய படுகொலைகள் நாள்தோறும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. சர்வதேச சமூகத்தின் முன்பாகவே நடத்தப்படுகின்றது. படுகொலைகளை உடன் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்குகஇத்தகைய படுகொலைகளை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் இத்தகைய படுகொலைகளை உடன் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம். கடந்த ஐம்பது வருடங்களாக தமிழ் பேசும் மக்கள் பல்வேறு வகைகளில் பல் வேறு தளங்களில் தொடர்ச்சியான இனப் படுகொலைக்கு உட்படுத்தப்பட்டு வருகின் றார்கள். அதன் தொடர்ச்சியாக அரசின் அண்மைய யுத்த நடவடிக்கைகளால் இடம் பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தஞ் சமடைந்துள்ள மக்கள் குழுமத்தினர் மீதும்இ அதன் அண்டிய மக்கள் குடியிருப்புகள் வைத்தியசாலை பாடசாலை சுற்றியல் பிரதேசங்கள் மீதும் வாகரையில் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் உயிர் பாதுகாப்பற்ற மாபெரும் மனிதப் பேரவலம் ஒன்று எங்கள் தாயக மண்ணில் வெளிப்படையாகவே நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இத்தகைய போர் இடர்களுக்கு முகம் கொடுத்த எமது மக்களுக்கு சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பு மிக அவசியமாகின்றது என்பதை தங்களுக்குச் சுட்டிக்காட்ட விழைகின்றோம். அடிபனி நிலைமைதமிழ் மக்கள் வாழும் தாயகத்தின் இரு பெரும் பிராந்தியங்களான கிழக்கு மாகாணம் வாகரையிலும் யாழ்.குடா நாட் டிலும் உணவு மருந்து போக்குவரத்து என் பவற்றின் மீது திட்டமிட்ட இறுக்கமான தடை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது இதனால் மோசமான பட்டினி நிலைமை இப் பிராந்தியங்களில் நிலவுகிறது. வாகரையிலும் யாழ்.குடாநாட்டிலும் குழந்தைகள் உள்ளிட்ட பல பொதுமக்கள் பட்டினியாலும் மருந்தின்மையாலும் படு கொலைக்கு ஆளாக்கப்பட்டுள்ள அவல நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. குழந்தைகள் சிறுவர்கள் கர்ப்பிணித் தாய்மார்கள் நோயாளிகள் வயோதிபர்கள் போன்ற விசேட கரிசனைக்குரியோரின் போசாக்கு நிலமை மோசமான நிலையை அடைந்துள்ளத தங்கள் சமூகத்தினுடைய உயரிய கரி சனையில் செயல் விளைவையும் பிர யோகித்து எமது மக்களை பட்டினிச் சாவிலிருந்தும் அரச பயங்கரவாத படுகொலையிலிருந்தும் பாதுகாக்குமாறும் அவசர வேண்டுகோள் விடுக்கின்றோம். உலகில் உணவு மருந்து போக்கு வரத்து உயிர்பாதுகாப்பு என்பவற்றை தடுக்கும் அச்சத்துக்குள்ளாக்கும் அரசு களையும் பயங்கரவாத குழுக்களையும் கண்டித்து கட்டுப்படுத்தி மனித வாழ்வில் உயர்வை மேன்மைப்படுத்துகின்ற தங்கள் சமூகம் இது விடயத்தில் விரைந்து நட வடிக்கை எடுக்கவேண்டுமென வேண்டுகின்றோம். உலகில் ஓர் மூலையில் உயிர் வாழ்தற்காக ஏங்கித் தவிக்கின்ற எம்மை சிறிலங்கா அரசின் திட்டமிட்ட படுகொலை களிலிருந்தும் இன அழிப்பு நடவடிக்கை யிலிருந்தும் காப்பாற்றுங்கள் என்று மானிட தர்மத்தின் பேரால் வேண்டுகின்றோம். மனித சமூகத்தின் உயரின விழுமியங்கள் தொடர்பாக அக்கறை எடுத்து செயற்படும் தங்கள் சபை தங்கள் சாசனத்தின் சகல உறுப்புரைகளின்படியும். தமிழ் மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக் கவேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட வெகுஜன அமைப் புக்களின் ஒன்றியத் தினராகிய நாங்கள் தமிழ் பேசும் மக்கள் சார்பாக உரி மையுடன் வேண்டிக் கொள்கின்றோம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.