Monday, December 11, 2006

ஆயுதங்களை அகற்றித் தாக்குதலை நிறுத்துமாறு புலிகளுக்கு...

ஆயுதங்களை அகற்றித் தாக்குதலை நிறுத்துமாறு புலிகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கண்காணிப்புக் குழுவிடம் வேண்டுதல் வாகரைப் பகுதியில் இருந்து ஆயுதங்களை அகற்றி படையினர் மீது தாக்குதலை நிறுத்தும்படி விடுதலைப் புலிகளுக்கு அழுத் தம் கொடுக்குமாறு யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடம் தாம் கேட்டுள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்தார். அவ்வாறு முடியாவிடின் இவ்விடயத்தை சர்வதேசத்துக்கு தெரிவிக்கும்படியும் தாம் கண்காணிப்புக் குழுவிடம் கேட்டுள்ளதாகவும் அவர் தெரி வித்தார். கிழக்கில் தாக்குதல் நடக்கும் பகுதிக்கு செல்வதற்குப் பாதுகாப்புப் பிரச்சினை இருப்பதாக கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. அந்த இடங்களுக்கு செல்வதற்கான அனுமதியை இரு தரப்பினரிடம் இருந்து பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும் குழு தெரிவித்துள்ளது.