Sunday, December 17, 2006

துப்பாக்கி முனையில் பத்திரிகை வியாபாரம்

துப்பாக்கி முனையில் பத்திரிகை வியாபாரம் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பி.யினர் தமது முகாம்களின் முன்னர் நின்று தமது பத்திரிகை விற்பனையை துப்பாக்கி முனையில் மேற்கொண்டு வருகின்றாகள். கடந்த மூன்று நாட்களாக இந்த நடவடிக்கை இடம் பெற்றுக் கொண்டு இருக்கின்றது குறிப்பாக ஸ்ரீதர் தியேட்டர் வாசல் சுன்னாகம் மானிப்பாய் கரவெட்டி பருத்தித்துறை தீவகம் தென்மராட்சி போன்ற பகுதிகளில் இந்த நடவடிக்கை இடம் பெற்றுக் கொண்டு இருக்கின்றது குறிப்பிட்ட பத்திரிகையை வாஙக மறுப்பவாகள் மீது உடனடியாக ஏன் வாங்க முடியாது என கேள்விகள் கேட்டு எச்சரிக்கைவிடப்படுவதன் காரணமாக தற்போது யாழ்ப்பாணத்தில் இடம் பெற்று வரும் துப்பாக்கிப்பிரயேபகங்களையும் இவாகள் நினைவு படுத்துவதன் காரணமாக அனைத்து பொது மக்களும் தம்மிடம் பணம் இல்லாவிட்டாலும் அடுத்தவரிடம் வாங்கியேனும் குறிப்பிட்ட தினமுரசு பத்திரிகையைப் பெற்றச் செல்லும் அவல நிலமை காணப்படுகின்றது தனியார் மற்றும் அரச பொது போக்குவரத்து வாகணங்களில் செல்பவாகள் கூட மறித்து குறிப்பிட்ட பத்திரிகை வாங்கிய பின்னரே செல்ல அனுமதிக்கப்படும் நிலமையும் காணப்படுகின்றது