குடாநாட்டுக்கும் கிழக்கிற்கும் இராணுவத்தளபதி விஜயம்
இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையிலான உயர்மட்ட இராணுவக் குழு ஒன்று நேற்றுக்காலை குடாநாட்டுக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டது.
பாதுகாப்பு நிலைவரங்களை ஆராய்வதே இராணுவத் தளபதி தலைமையிலான உயர்மட்ட குழுவினரது இந்த விஜயத்தின் நோக்கமாகும் என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.நேற்றுக்காலை விமானப் படை விமானம் மூலம் பலாலி விமானத்தளத்தை சென்றடைந்த இராணுவத் தளபதி தலைமையிலான உயர்மட்ட குழுவினரை யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி வரவேற்று அழைத்துச் சென்றார்.
பின்னர் பலாலி இராணுவத்தளத்தில் கள நிலைவரம் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்கால பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளிடம் விளக்கியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இராணுவத் தளபதி, விமானப் படைத் தளபதி உள்ளிட்ட உயர்மட்ட பாதுகாப்புக்குழு ஒன்று நேற்று முன்தினம் மதியம் கிழக்கிற்கும் விஜயம் செய்து அங்குள்ள பாதுகாப்பு நிலைவரங்கள் குறித்தும் ஆராய்ந்திருக்கிறது.இந்த உயர்மட்ட குழுவினர் வெலிகந்தையிலுள்ள 23 ஆவது பிரிவு தலைமையகத்தில் கிழக்கு மாகாண இராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அத்துடன் வாகரை நிலைவரம் குறித்தும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Sunday, December 17, 2006
குடாநாட்டுக்கும் கிழக்கிற்கும் இராணுவத்தளபதி விஜயம்
Sunday, December 17, 2006





