Saturday, December 16, 2006

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தரை காணவில்லை

கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தரை காணவில்லை கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எஸ்.ரவீந்திரநாத்தை நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 1.15 ல் இருந்து காணவில்லை என அறியமுடிகிறது. இவரை இப் பதவில் இருந்து விலகும்படி கருணாஒட்டுக் கூலிக் கும்பல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது தெரிந்ததே. இவ் அச்சுறுத்தலுக்கு அஞ்சி 55 அகவையுடைய 2 மகள்களின் தந்தையான இவர், பல்கலைக்கழக மானியத்தில் தனது பதவிவிலகல் கடிதத்தை கையளித்த பின் வித்தியா மாவத்தையில் மதியம் 12.30க்கு கூட்டம் ஒன்றுக்கு சென்றபின் காணவில்லை என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மதிய்ம் 2 மணியளவில் இவரது சாரதி மறுபடியும் இவரை ஏற்ற சென்று போது காணவில்லை என அறிந்து குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தபின் இரவு 9.30 மணியளவில் காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்யபட்டது. வித்தியா மாவத்தை பெளத்தலோகமாவத்தைக்கு அருகில் உள்ளது. இவை உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இதற்கு முன் செப்ரம்பர் 30ம் திகதி கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைத்துறைப்பீடாதிபதியான சுகுமாரை கருணா ஒட்டுக் கூலிக் கும்பல் கடத்திச் சென்று துறைவேந்தரை பதிவிவிலகும் படி கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கமையவே இவர் பதவிவிலகல் கடிதத்தை கையளித்திருந்ததாக அறியமுடிகிறது.