Saturday, December 16, 2006

நிர்வாக முடக்கலுக்கு மண்மீட்கும் படை அழைப்பு.

பாலா அண்ணாவின் இறுதி நிகழ்வையொட்டி நிர்வாக முடக்கலுக்கு மண்மீட்கும் படை அழைப்பு. இறுதிவரை எம் தலைவனுடன் தேசத்துக்காக தன்னை அர்ப்பணித்து தேச விடுதலையின் விடிவுக்காக அயராது உழைத்த தேசத்தின் குரல் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் இழப்பு எமது தேசத்துக்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். தேசவிடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து வரலாறாகிய பாலா அண்ணாவுக்கு எமது இறுதி மரியாதையை செலுத்துமுகமாகவும் வாகரையில் அரச பயங்கரவாதத்தால் பலியான எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை (18-12-2006) அன்று வர்த்தக நிலையங்களை மூடி போக்குவரத்துச் சேவைகள் மற்றும் கல்விநிலைய செயற்பாடுகளை இடைநிறுத்தி துக்கதினமாக அனுஷ்டிப்பதுடன் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் நடாத்தப்படும் நேரடி தாக்குதல்களை நிறுத்தி இராணுவ நடவடிக்கைகள் நடைபெறும் இடத்திலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு முழுமையானதும், தடைகளற்றதுமான சுதந்திரம் வழங்கப்படவேண்டுமென சர்வதேசத்தை வலியுறுத்தக்கோரியும் அன்றையதினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்வாக முடக்கல் போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கின்றோம். வாகரைப்பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் கடுமையான தாக்குதல்கள் மற்றும் விமானத்தாக்குதல்கள் காரணமாக 35ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிர்க்கதியற்ற நிலையில் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.வாகரைப்பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து அண்டிய பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் தங்கியிருந்த அப்பாவித் தமிழ் மக்கள் மீது படையினர் நடத்திய விமானக் குண்டு வீச்சில் சுமார் 45க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 100க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். அத்துடன் இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக நடத்தப்படும் n~ல் தாக்குதல்கள் மற்றும் விமானக்குண்டு வீச்சுக்களால் சுமார் 35ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து இருக்க இடமின்றி உண்ண உணவின்றி உடுக்க உடையின்றி அகதிகளாக்கப்பட்டு எவ்வித மருத்துவ வசதிகளுமின்றி அல்லலுற்று அவதிப்படுகின்றனர். இடம்பெயர்ந்துள்ள மக்களுடைய அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுவதற்கும் வாகரையிலிருந்து பாதுகாப்பான பகுதிகளுக்கு மக்கள் இடம்பெயர்ந்து செல்வதற்கும் தடைவிதித்து வருகின்றனர். மேதல்களில் அகப்பட்டுள்ள எமது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை அவர்களுக்குச் சென்றடையாதவாறும் தாக்குதல்களால் படுகாயமடைந்த மக்களை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லமுடியாதளவுக்கும் வழிகளைத் தடைசெய்து மாபெரும் பஞ்சத்தையும் பட்டினியையும் ஏற்படுத்தி; எமது சகோதர உறவுகளைக் கொல்ல அரசாங்கமும் படையினரும் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர். எமது மக்கள் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த அவலத்தை சர்வதேசத்துக்கு தெரியப்படுத்தவும் அரசு மேற்கொண்டுவரும் பயங்கரவாதத்தில் பலியான எமது மக்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாகவும் தற்பொழுது நடைபெற்றுவரும் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு எந்த விதத்திலும் இடையூறு ஏற்படாமல் இந்த நிர்வாகமுடக்கல் போராட்டத்தை கடைப்பிடித்து சர்வதேசத்துக்கும் அரசுக்கும் எமது மக்களின் அவலநிலையையும் உண்மை நிலையையும் முழுஒத்துழைப்புடன் உணரச்செய்வோம்.. எமது மட்டுநகர் மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோளை விடுக்கிறோம். எதிர்வரும் திங்கட்கிழமை (18-12-2006) அன்று வர்த்தக நிலையங்களை மூடி போக்குவரத்துக்கள் மற்றும் கல்விநிலையங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதுடன் அன்றையதினம் அநாவசியமாக வீதிகளில் திரிவதையும் தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். எமது மக்களுக்காக மனப்பூர்வமாக உங்கள் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம். ‘உடல் தேசத்துக்கு உயிர் விடுதலைக்கு’ தேசிய மீட்புப் படை மட்டக்களப்பு தமிழீழம் 16-12-2005