Saturday, December 16, 2006

தமிழர் தாயகம் துயரில் மூழ்கியது! புலம்பெயர் நாடுகளிலும்..

தமிழர் தாயகம் துயரில் மூழ்கியது! புலம்பெயர் நாடுகளிலும் துக்கம் மதியுரைஞர் அன்டன் பாலசிங்கத் தின் மறைவினால் தமிழர் தாயகம் துயரில் மூழ்கியிருக்கின்றது. வடக்கு கிழக்குப் பகுதிகளில் எல்லாப் பிரதேசங்களிலும் துக்கம் அனுஷ்டிக்கப்படு கிறது. எதையோ பறிகொடுத்த உணர்வுடன் பொது மக்கள் தங்கள் துயரத்தை ஏனை யோருடன் பகிர்ந்துகொள்வதைக் காண முடிகின்றது. இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளில் துக்க நிகழ்வுகள் பரவலாக நடத்தப்படுகின் றன. சோக கீதம் இசைத்து மக்கள் அஞ்சலி நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்துகின் றனர்.இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய நகரப் பகுதிகளில் ஒருவித வெறுமை நிலை நேற்றுக் காணப்பட்டது. ஆயினும், துயரை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள், ஏற்பாடுகளை செய்ய முடியாதவர்களாக அந்த மக்கள் உள்ளனர் என்று செய்தியாளர்கள் அறிவிக்கின்றனர். திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா, மன்னார் மாவட்டங்களிலும் மக்கள் துயரில் மூழ்கியுள்ளனர். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன் னிப் பிரதேசத்தில் பல இடங்களிலும் கொடி கள் கட்டப்பட்டு சோககீதம் இசைக்கப் பட்டது. கிளிநொச்சி, மாங்குளம், புளியங்குளம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு ஆகிய நகரங்களின் முக்கிய சந்திகளில் அமரர் அன்டன் பாலசிங்கத்தின் உருவப்படத் துக்குப் பூரண கும்பம் வைக்கப்பட்டு மலரஞ்சலி செய்யப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. வன்னியில் நேற்று முதல் மூன்று நாட்களாக துக்கம் அனுஷ்டிக்கப்படு மென புலிகளின் ஊடகப் பிரிவு தெரிவித்தது. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடு களிலும், தமிழ் மக்களின் இல்லங்களிலும் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. பொது வைபவங்கள் ரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன. உலகெங்கும் தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் அவற்றின் வழமையான சேவைகளை நிறுத்திவிட்டு அன்டன் பாலசிங்கத்தின் நினைவு நிகழ்ச்சிகளையும், சோககீதத்தையும் வெளியிட்டுவருகின்றன.