Thursday, December 14, 2006

கிழக்கில் அகதிகளைத் தங்க வைக்க சூனியப் பிரதேசம் ....

கிழக்கில் அகதிகளைத் தங்க வைக்க சூனியப் பிரதேசம் நிறுவ அரசு யோசனை! புலிகளின் இணக்கத்தைப் பெற முயற்சி செஞ்சிலுவைக் குழுவிடம் உதவி கோரல் கிழக்கில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் தீவிர மோதல்களால் இடம்பெயர்ந்து சிக்குண்டிருக்கும் சுமார் 35 ஆயிரம் சிவிலியன்களைத் தங்க வைப்பதற்காக யுத்த சூனியப் பிரதேசம் ஒன்றை உருவாக்குவதற்கு அரசுத் தரப்பில் யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது. அங்கு பாதுகாப்புப் பிரதேசம் ஒன்றை (குச்ஞூஞு ஏச்திஞுண) நிறுவுவதற்கு உதவுமாறும், விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து அதற்கான இணக்கத்தைப் பெற்றுக்கொள்ளுமாறும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவிடமும், இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிடமும் அரசு கோரிக்கை விடுத்திருக்கின்றது. இப்படி ஒரு யோசனையை அரசு, புலி களிடம் முன்வைத்திருக்கிறது என்பதை அரச சமாதானச் செயலகப் பணிப்பாளர் பாலித கொஹொன்ன உறுதிப்படுத்தியிருக்கிறார். பாதுகாப்புப்பகுதி ஒன்றை அமைப் பதற்கான யோசனையை நாங்கள் முன் வைத்திருக்கின்றோம். அதற்கான பதிலுக் காகக் காத்திருக்கிறோம். என்று பாலித கொஹொன்ன தெரிவித்தார். கிழக்கில் பொது மக்களை விடுதலைப் புலிகள், மனிதக் கேடயங்களாகப் பயன் படுத்துகின்றனர் என்றும் அவர் குற்றஞ் சாட்டினார். கிழக்கில் திருகோணமலை, மட்டக் களப்பு மாவட்டங்களில் அரசுப் படை களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் தொடர்ந்த படி உள்ளன. அங்கு இருதரப்பாரும் ஷெல் மோதல்களிலும் ஈடுபடுவதால் பொது மக் கள் வசிப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்து அவலப்படுகின்றனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் மீது கடந்த சில தினங்களாக நடத்தப்பட்ட அகோர ஷெல் தாக்குதல்களி னால் அங்கு முன்னரே பல தடவைகள் இடம்விட்டு இடம்பெயர்ந்து போக் கிடம் தெரியாது அந்தரித்து நிற்கும் மக்கள் அநியாயமாக உயிரிழந்துள்ளனர்.கடைசியாக இடம்பெற்ற தீவிர மோதல்களின்போது திருமலை மட்டக்களப்பு எல்லைப் பிரதேசங்களில் பெருமளவிலான சிங்களக் குடும்பங்களும் இடம்பெயர நேர்ந்துள்ளது. இவ்வாறு கிழக்கில் பல இடங்களிலும் இடம்பெயர்ந்து தரித்து வாழும் மக்களை ஒன்றாக ஓரிடத்தில் தங்கவைப்பதற்கான பகுதி ஒன்றை உருவாக்குவது குறித்தே அரசுத் தரப்பிலிருந்து யோசனை முன் வைக்கப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசங்களில் வசிக்கும் இடம்பெயர்ந்த மக்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வலிந்து வரவைப்பதற்காகவே அரசு இத்திட்டத்தை வகுத்திருப்பதாக தமிழர் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், போர் நிறுத்தக் கண் காணிப்புக் குழு மற்றும் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழு ஊடாக முன்வைக்கப்பட் டிருக்கும் இந்த யோசனைக்குப் புலிகள் தரப்பு இணங்குமா என்பது தெரியவில்லை.