அமைதி நடவடிக்கைகளை உடன் முன்னெடுக்குமாறு இந்தியா இலங்கைக்கு வலியுறுத்தல்.
அமைதி முயற்ச்சிகளை முன்னெடுப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு இந்திய அரசாய்கம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் நிலை குறித்து இந்திய கீழ் சபையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் பதிலளிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரனாப் முகர்ஜி இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தமது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை உரிய முறையில் கடைப்பிடிப்பதன் மூலம் பேச்சுவார்தைக்கான சூழ்நிலையை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Thursday, December 14, 2006
அமைதி நடவடிக்கைகளை உடன் முன்னெடுக்குமாறு இந்தியா..
Thursday, December 14, 2006





