Wednesday, December 13, 2006

உதயனுக்கு சர்வதேச விருது இலங்கையில் பெறும்...

உதயனுக்கு சர்வதேச விருது இலங்கையில் பெறும் முதலாவது பத்திரிகை பிரான்ஸ் நாட்டின் நில எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு (Reporters Without Borders) வருடாந்தம் பிரசித்தி பெற்ற ஊடகவியலாளருக்கும் ஊடகங்களுக்கும் சர்வதேச மட்டத்தில் வழங்கப்படும் விருதுகளில் ஒன்றே உதயனுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. செய்திகளைத் தெரிவிப்பதற்கான ஊடகங்களின் உரிமைக்கும், செய்திகளை அறிந்து கொள்வதற்கான மக்களின் உரிமைக்குமாக உதயன் போராடி வருவதற்காகவே இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பிரிவில் மொத்தம் நான்கு நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் ஒன்று உதயன். மற்றைய மூன்றும் பர்மா, லெபனான், ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் ஆகும். இலங்கையில் முதல் முறையாக உதயனுக்கே இந்த விருது கிடைத்துள்ளது.உதயனுக்கு இந்த விருது வழங்கப்பட்டதன் மூலம் இலங்கையின் ஊடகத்துறை முழுவதுமே பாராட்டுகிறது என்று ஊடகத்துறையினர் பலரும் கருத்துத் தெரிவித்தனர். நான்கு பிரிவுகளாக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 1. பத்திரிகைச் சுதந்திரத்துக்காகத் தனது அர்ப்பணிப்புடனான சேவையை நிரூபித்த பத்திரிகையாளர்கள். இவர்கள் இந்த ஆண் டின் பத்திரிகையாளர்கள். 2. செய்திகளைத் தெரிவிப்பதற்கும், அவற்றை அறிந்து கொள்வதற்குமான உரி மைக்காகப் போராடும் செய்தி ஊடகங்கள். 3. பத்திரிகைச் சுதந்திரத்தைப் பாதுகாப்பவர்கள். 4. இலத்திரனியல் துறையில் அதாவது இன்டர்நெட்டில் செய்திகளையும், தகவல் களையும் வழங்குவதிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டவர்கள். இந்த நான்கு பிரிவுகளிலும் மொத்தம் 10 பேருக்கும் நான்கு செய்தி ஊடகங் களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. பரிசு பெற்ற ஊடகவியலாளர்கள் 10 பேரும் முறையே எரித்திரியா, மியான்மர், கொலம்பியா, சிரியா, சீனா, கியூபா, மெக் ஸிகோ, துருக்மெனிஸ்தான், கொங்கே ஜனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். 35 பேரைக் கொண்ட சர்வதேச ஜுரி கள் குழு ஒன்றே பரிசுக்குரிய ஊடகவிய லாளர்களையும், ஊடகங்களையும் தெரிவு செய்தது. விருதுகள் பெறுவோரினதும் ஊடகங்களினதும் விவரங்கள் இம்மாதம் 8ஆம் திகதி வெளியிடப்பட்டன.ஜுரிமாரின் கருத்துப்படி உதயன் அதிக வாசகர்களைக் கொண்ட தினசரிப் பத்திரிகை, 20 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது. வட இலங்கையில் யுத்தம் நடந்து கொண்டு இருந்தாலும், உதயன் ஆரம்பம் முதலே நடுநிலைக் கொள்கை பிறழாமல் இயங்கி வருகிறது. உதயன் பத்திரிகை ஊழியர்களில் ஐவர் இந்த வருடம் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களில் இருவர் இந்த வருடத்தின் உலகப் பத்திரிகைத் தினத்தன்றே கொல்லப்பட்டார்கள். கொழும்பிலிருந்து வெளிவரும் உதயனின் சகோதரப் பத்திரிகை சுடர் ஒளி அலு வலகம் மீது கடந்த செப்டெம்பர் மாதத்தில் தாக்குதல் நடந்தது. யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகையில் அறிக்கைகளைப் பிரசுரிக்குமாறு அங் குள்ள பத்திரிகையாளர்கள் இரு தடவை கள் துப்பாக்கி முனையில் பலவந்தப்படுத்தப்பட்டார்கள். இப்படித் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விருது வழங்கும் நிகழ்வு நேற்று (12.12.2006) செவ்வாய்க்கிழமை பிரெஞ்சு நேரப்படி இரவு 7.30 மணிக்கு பாரிஸ் நகரில் EDF Electra வில் நடைபெற்றது.