விடுதலைப் புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாப் பயன்படுத்துவதில்லை - அரசின் குற்றச்சாட்டுக்கு இளந்திரையன் மறுப்பு.
விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துவதாக சிறீலங்கா அரசாங்கம் கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.இவ்வாறு விடுதலைப் புலிகள் மீது குற்றம் சாட்டுவதற்கு சிறீலங்கா அரசுக்கு எதுவித அருகதையும் இல்லை.
யுத்த நிறுத்தத்தை கண்காணிப்பதற்கு, யுத்த சூழலைக் கண்காணிப்பதற்கு என சர்வதேச சமூகத்தின் ஒப்புதலின் பேரிலும் இரு தரப்பினரும் ஏற்றக் கொண்டதற்கு அமைய இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்கள் இருக்கின்றார்கள்.கண்காணிப்புக் குழுவினரை நடுநிலமையாளர்கள் என அனைவராலும் ஏற்கப்பட்ட நிலையில் சம்பவ இடங்களுக்கு சென்று இவர்கள் பார்வையிடுவதற்கு சிறீலங்கா அரசாங்கமும் அரச படைகளும் அனுமதிக்க வேண்டும்.கண்காணிப்புக் குழுவினர் சம்பவ இடங்களுக்கு செல்லவிடாது தடுத்து வைத்துக் கொண்டு அங்கே தாங்கள் நினைப்பது போல கற்பிதற்களை கூறிக்கொள்வது அபத்தமானது.
இவ்வாறு நடந்துகொண்டு புலிகள் மீது குற்றம் சுமத்துவதில் எந்தவித உண்மையும் இல்லை.பொதுமக்களை விடுதலைப் புலிகள் மனிதத் கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர் என்கிற குற்றச் சாட்டு எவ்வாறான அடிப்படையில் இருந்து எழ முடியும் என பார்க்க வேண்டும். சிறீலங்காப் படைகளின் தளங்கள் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்றன.சிங்கள மக்கள மத்தியிலிருந்து தான் தமிழ் மக்கள் மீது கனரக ஆயுதங்களினால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
தமிழ் மக்கள் மீது நடத்தப்படுகின்ற விமானத் தாக்குதல்களை மேற்கொள்ளும் விமானங்கள் சிங்கள மக்கள் வாழும் பகுதியில் தான் ஓடுபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதை அவர்கள் கூறமுடியுமா?
போர் விமானங்கள், ஆட்லறிப் பீரங்கிகள், மற்றும் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தும் சிறீலங்காப் படைகள் சிங்கள மக்களை கேடயங்களாக வைத்துள்ளனர் என மாறி நினைத்தால் அதனை எந்த வகையில் கூறுவது என இளந்திரையன் மேலும் தெரிவித்துள்ளார்.
Wednesday, December 13, 2006
அரசின் குற்றச்சாட்டுக்கு இளந்திரையன் மறுப்பு.
Wednesday, December 13, 2006





