கொழும்பு பங்கு சந்தையில் நேற்று பாரிய வீழ்ச்சி உணரப்பட்டுள்ளது. கிழக்கில் தொடரும் மோதல்கள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் குழுவில் இருந்து ஜே.வி.பி வெளியேறியமை ஆகியவற்றால் பங்கு பரிமாற்றங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது இதுவரை இல்லாத அளவில் இலங்கை நாணயத்தின் மதிப்பு டொலர் பெறுமதிக்கு எதிராக கடுமையான வீழச்சியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறான நிலை தொடருமானால் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வரமாட்டார்கள் என பொருளியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்





