Sunday, December 10, 2006

புலிபாய்ந்தகல் நோக்கிய உடுருவல் முயற்சி முறியடிப்பு:..

புலிபாய்ந்தகல் நோக்கிய உடுருவல் முயற்சி முறியடிப்பு: இரு ஒட்டுக்குழுவினர் பலி! 10 பேர் காயம்: 2 போராளிகள் வீரச்சாவு. மட்டக்களப்பு புலிபாய்ந்தகல் நோக்கி சிறீலங்காப் படையினரும் துணை இராணுவக் குழுவினரும் இணைந்து முன்னெடுத்த ஊடுருவல் முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளர் சீராளன் பதிவு இணையதளத்திடம் தெரிவித்துள்ளார். இன்று கலை 7.30 மணியளவில் கிண்ணியடி பிரம்படித்தீவுப் பகுதியின் ஊடாக ஊடுருவிய இராணுவத்தினரும் துணை இராணுவக் குழுவினரும் குடும்பிமலை கோட்டப் பிரதேசத்திற்கு உட்பட்ட பெண்டுகள்சேனையில் இருந்த போராளிகள் மீது தாக்குதலைத் தொடுத்த போது இருதரப்பினரிடை உக்கிர மோதல் இடம்பெற்றுள்ளது. விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதலில் சீறீலங்காப் படையினர் மற்றும் துணை இராணுவத்தினர் தரப்பில் இருவர் கொல்லப்பட்டும் 10 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சீராளன் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து காயமடைந்தவர்களையும் உயிரிழந்தவர்களையும் காவிக்கொண்டு சிறீலங்காப் படையினர் தப்பியோடியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளர் சீராளன் தெரிவித்துள்ளார். இன்றை மோதலில் பெண் போராளி ஒருவரும் ஆண் போராளி ஒருவருமாக இருவர் வீரச்சாவடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளர் சீராளன் மேலும் தெரிவித்துள்ளார். pathivu.com