Sunday, December 10, 2006

சிங்கள குடியேற்றவாசிகள் 2132 பேர் கந்தளாயில் தஞ்சம்.

மகிந்தபுர படைமுகாமை சுற்றி இருந்த சிங்கள குடியேற்றவாசிகள் 2132 பேர் கந்தளாயில் தஞ்சம். திருமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் எறிகணை மோதல்களால், மகிந்தபுரம் படை முகாமின் பதினைந்து கிலோமீற்றர் விட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் சிங்களக் குடியேற்றவாசிகள், முற்றாக வெளியேறியுள்ளனர். சோமபுரம், கல்லாறு, சேருநுவர, மீதகமம் ஆகிய பகுதிகளில் இருந்து மட்டும், இரண்டாயிரத்து இருநூற்று முப்பத்திரண்டு சிங்களக் குடியேற்றவாசிகள் இடம்பெயர்ந்து கந்தளாயில் தஞ்சம் புகுந்துள்ளனர். குறிப்பிட்ட சிங்களக் குடியேற்றவாசிகளில் ஒரு தொகுதியினர் அக்ரபோதி வணக்க தலத்திலும், மற்றுமொரு தொகுதியினர் கந்தளாய் தொடருந்து நிலையத்தை அண்டியுள்ள பழைய நீதிமன்ற வளாகத்திலும், ஏனையோர் பக்தியகமம் பாடசாலையிலும், ராஜ எல பாடசாலையிலும் அகதிகளாக தங்கியுள்ளனர். குறிப்பிட்ட கிராமங்களில் வசித்து வந்த ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள், கடந்த காலங்களில் சிறீலங்கா படைகளாலும், ஆயுதம் தாங்கிய சிங்களக் குண்டர்களாலும் விரட்டப்பட்டு, அவை சிங்களக் குடியேற்றக் கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளனர்.