Sunday, December 10, 2006

பலாலி ஊரெழு படைமுகாம்களில் இருந்து அதிகாலை

பலாலி ஊரெழு படைமுகாம்களில் இருந்து அதிகாலை முதல் எறிகணைத் தாக்குதல்கள். இன்று அதிகாலை 4.00 மணி முதல் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி ஊரெழு மற்றம் வரணிப் படைத்தளங்களில் இருந்து படையினர் தொடாச்சியாக எறிகணைத்தாக்குதல்களை வன்னி பெரு நிலப்பரப்பின் மீது மேற் கொண்டுள்ளார்கள் இத்தகைய எறிகணைத்தாக்குதல்கள் காரணமாக பரீட்சைக்கு படிப்பதற்காக அதிகாலையில் எழுந்த மாணவர்கள் பாடங்களை கற்க்க முடியாது பெரும் சிரமத்திற்க்கு உட்பட்டார்கள் படைத்தரப்பினர் பரீட்சைக்காக பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறிவிட்டு தற்போது அதி காலையிலேயே தொடர்ச்சியாக எறிகணைகளை வீசி வருவதினால் பாடங்களை ஒரு மன நிலையில் இருந்து கற்க்க முடியாத நிலை காணப்படுவதுடன் வீடுகளின் அதிர்வுகளும் பெரும் தடையாக இருப்பதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றார்கள் இது போன்றே வன்னி மாணவர்களின் கல்வியும் கூட இத்தகைய எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக பயத்தினாலும் மற்றும் அதிர்வுகளினாலும் பாதிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்