Saturday, December 09, 2006

திருமலை ஈச்சிலப்பற்றில் முறியடிப்புத் தாக்குதல்:

திருமலை ஈச்சிலப்பற்றில் முறியடிப்புத் தாக்குதல்: 30 படையினர் பலி: 100 படையினர் காயம்: ஆட்டிலறி அழிப்பு: 5 சடலங்கள் மீட்பு. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான ஈச்சிலம்பற்று நோக்கிய சிறீலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு மகிந்தபுர இராணுவ படைமுகாமிலிருந்து ஈச்சிலம்பற்றை ஆக்கிரமிக்கும் முகமாக சிறீலங்காப் படையினரால் கனரக ஆயுதங்கள் சகிதம் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டு இரண்டரைக் கிலோமீற்றர் தூரம் நிலத்தை ஆக்கிரமித்திருந்தனர். இதனையடுத்து விடுதலைப் புலிகளின் போராளிகள் முறியடிப்புத் தாக்குதலில் ஈடுபட்டு படையினரின் முன்னேற்ற முயற்சியை முறியடித்துள்ளனர். இன்றை முறியடிப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படைத்தரப்பில் இரு அதிகாரிகள் உட்பட 30 படையினர் கொல்லப்பட்டதோடு மேலும் நூற்றுக் மேற்பட்ட படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.முறியடிப்புத் தாக்குதலில் சிறீலங்காப் படையினர் தமது முன்னேற்ற முயற்சியைக் கைவிட்டு காயப்பட்டவர்களையும் காவிக்கொண்டு பழைய நிலைகளுக்கு பின்வாங்கி ஓடியுள்ளனர். இன்றை மோதலின் போது கல்லாறு படைத்தளம் நோக்கி நடத்திய விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலில் சிறீலங்காப் படையினரின் ஆட்டிலறி பீரங்கி ஒன்றும் தகர்க்ப்பட்டுள்ளது. மோதலின் போது சிறீலங்கா படையினரின் ஜந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை விடுதலைப் புலிகள் தரப்பில் எதுவித உயிரிழப்புக்ளும் ஏற்படவில்லை என்பதும் இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.