சிறீலங்கா அரசின் பாடசாலை மீதான எறிகணைத் தாக்குதலில் 13 அகதிகள் காயம் வாகரைப் பகுதியில் இருந்து 8 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாலச்சேனை இன்று சனிக்கிழமை சிறீலங்கா அரசாங்கம் மேற்கொணட் எறிகணைத் தாக்குதலில் 4 வயது குழந்தை உட்பட 13 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இது பற்றி மேலும் தெரியவருகையில் 9 பேர் இடம்பெயர்ந்து பாடசாலை ஒன்றில் தஞ்சம் புகுந்திருந்தவர்கள் என அறியமுடிகிறது. இச் சம்பவத்தில் காயங்களுக்கு உள்ளானவர்கள் வாகரை வைத்தய சாலைக்கு கொண்டு சென்ற சிகிச்சை வழங்கப்படுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கடும் சமர் ஈச்சிலம்பற்று பகுதியில் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.





