Saturday, December 09, 2006

கருணா ஒட்டுக் கூலிக்குழுவின் சிறுவர் துஷ்பிரயோகம்..

கருணா ஒட்டுக் கூலிக்குழுவின் சிறுவர் துஷ்பிரயோகம் அம்பலம் சிறீலங்க அரச படைகளின் ஆதரவுடன் கருணா குழு எனப்படும் துணை ஆயுதக் குழு கிழக்கு மாகாணத்தில் நூற்றுக்கணக்கான சிறுவர்களை படையணியில் சேர்த்த வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவை தளமாக கொண்டுள்ள சர்வதேச உறவுகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது சர்வதேச உறவுகள் நிலையத்தின் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது கிழக்கு மாகாணத்தில் சிறுவர்களை படையணியில் சேர்க்கும் கருணா குழுவின் செயல்பாடுகளுக்கு ஸ்ரீலங்கா அரச படைகள் துணை புரிவதாகவும் சில சந்தர்ப்பங்களில் நேரடியாக சிறுவர்களை கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகமும் அந்த அறிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அண்மையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றை ஸ்ரீலங்கா படைகள் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியதாகவும் அதன் போது அந்த கிராமத்தில் இருந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை புகைப்படம் பிடித்ததாகவும் அதனை தொடர்நது சில மணி நேரத்தில் அங்கு வந்த கருணா குழுவினர் அந்த சிறுவர்களையும் இளைஞர்களையும் கடத்திச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கடத்தப்பட்ட தமது பிள்ளைகள் கருணா குழு முகாமில் இருப்பதை பெற்றோர் அவதானித்துள்தாகவும் அந்த முகாமகளுக்கு ஸ்ரீலங்கா காவல் துறை பாதுகாப்பு வழங்கி வருவதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கைளில் குறிப்பிடப்பட்டுள்ளது சிறீலங்கா அரசாங்கம் இந்த கடத்தல் சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்துள்ள போதிலும் எந்தவிதமான நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது