யாழில் கிளைமோர் தாக்குதல்: இரு பொலிஸார் பலி யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு பொலிஸார் உயிரிளந்துள்ளனர். பிற்பகல் 3 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பொலிஸாரும் இராணுவத்தினரும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை தாக்கியுள்ளனர். யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட இந்தப் பதற்றம் காரணமாக வர்த்தக நிலையங்கள் யாவும் உடன் பூட்டப்பட்டன. இதேநேரம் பண்ணைப் பகுதியில் நிலைகொண்டிருந்த இலங்கைப் போக்குவரத்துச் சபை வாகனங்கள் மற்றும் தனியார் சிற்றூர்திகள் மற்றும் ஆட்டோக்கள் என்பனவும் உடனடியாக குறிப்பிட்ட இடத்திலிருந்து வெளியேறியது. இதனைத் தொடர்ந்து பெரும் பதற்றமான நிலைமை நகரப்பகுதியில் காணப்பட்டது.





