குண்டுதாக்குதலில் பாதுகாப்பு அமைச்சு செயளர் கோதபாய ராஜபக்ஷ காயங்கள் எதுவுமின்றி மயிரிழையில் தப்பியுள்ளார். (படங்கள் உள்ளே)
இன்று காலை கொள்ளுப்பிட்டி தர்மபால மாவத்தையில் உள்ள சிட்டி வங்கி அருகில் (கிரின் ஒழுங்கையில்) இடம்பெற்ற குண்டுதாக்குதலில் பாதுகாப்பு அமைச்சு செயலர் கோதபாய ராஜபக்ஷ காயங்கள் எதுவுமின்றி மயிரிழையில் தப்பியுள்ளார்.
என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் சம்பவத்தினை அடுத்து அவர் அலரி மாளிகையில் இடம்பெறும் பாதுகாப்பு கூட்டம் கலந்துகொண்டிருகிறார்.பாதுகாப்பு அமைச்சு செயலாளரும் ஜ்னாதிபதியின் சகோதரரும் ஆன கோதபாய ராஜபக்ஷ சென்ற வாகனத்தின் முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் பலத்த சேதமாகியுள்ளன.
8 வாகனங்கள் முற்றாக சேதமடைந்தமை காரணமாக இந்த குண்டு தாக்குதலில் 17 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் இந்த பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் இப்பகுதியில் புகைமண்டலம் காணபடுகிறது இந்த பகுதி போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.இந்த தாக்குதல் சம்பவத்தினை தொடர்ந்து கொழும்பு மற்றும் புறநகர் பகுதியில் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தபட்டுள்ளது. யாழ். வடமராட்சியில் 1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் முதல் பாரிய நடவடிக்கையான "ஒபரேசன் லிபரேசன்" மற்றும் 1990 ஆம் ஆண்டு "திரிவிட பலய" ஆகிய இராணுவ நடவடிக்கைகளில் முக்கிய பங்கேற்று லெப். கேணலாக தரைப்படையை வழிநடத்தியவர் கோத்தபாய ராஜபக்ச.
சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய தளபதியாக இருந்து அராலி இறங்குதுறைப் பகுதியில் நடைபெற்ற அமுக்கவெடியில் கொல்லப்பட்ட டென்சில் கொப்பேக்கடுவவின் கட்டளையின் கீழ் அதிக இராணுவ நடவடிக்கைகளில் பங்காற்றியிருந்தவர் இவர்.இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் சம தகுதியில் கோத்தபாய ராஜபக்சவுடன் செயலாற்றியிருந்தார். 1990 ஆம் ஆண்டு மண்டைதீவை இராணுவம் ஆக்கிரமித்த "திரிவிட பலய" இராணுவ நடவடிக்கையில் அல்லைப்பிட்டி, மண்கும்பான், மண்டைதீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட பொதுமக்களை படுகொலை செய்தமை மற்றும் காணாமல் போகச் செய்த நடவடிக்கையில் நேரடியாக சரத் பொன்சேகாவும் கோத்தபாய ராஜபக்சவும் ஈடுபட்டிருந்தனர்.
அந்த இராணுவ நடவடிக்கையில் களத்தில் படைகளை நகர்த்திய முன்று லெப். கேணல்களில் கோத்தபாய ராஜபக்சவும் சரத் பொன்சேகாவும் இருந்தனர். இதில் சரத் பொன்சேகா முதலாவது சிங்க றெஜிமன்ட் பட்டாலியனையும் கோத்தபாய ராஜபக்ச முதலாவது கஜபா றெஜிமன்ட் பட்டாலியனையும் வழிநடத்தியிருந்தனர்.
Friday, December 01, 2006
கோத்தபாய ராஜபக்சவை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல்
Friday, December 01, 2006





