Sunday, December 10, 2006

வாகரை நலன்புரி நிலையம் மீது இன்று தாக்குதல்

வாகரை நலன்புரி நிலையம் மீது இன்று தாக்குதல் 10 பொதுமக்கள் பலி. 15வரையானோர் படுகாயமடைந்துள்ளனர் வாகரையில் சிறிலங்காப் படையினர் நலன்பரி நிலையங்களை இலக்குவைத்து இன்று மேற்கொண்ட எறிகணை வீச்சுத் தாக்குதலில் 10ற்கும் அதிகமான அப்பாவிப்பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 15வரையானோர் படுகாயமடைந்துள்ளனர் என விடுதலைப்புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இ.இளந்திரையன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட வம்மிவெட்டுவான் பாற்சேனை பகுதிகளில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த நலன்புரி நிலையங்களை இலக்குவைத்து சிறிலங்காப் படையினர். கடல்மற்றும் தரைவழித்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இத் தாக்குதலில் 10ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் 15போ படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த மக்கள் மருத்துவமனைகளுக்கு எடுத்துச் செல்லமுடியாத நிலைகளுக்கு சிறிலங்காப் படையினர் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களையும் கடல் வழித் தாக்குதல்களையும் மேற்கொண்டவண்ணமுள்ளனர். இதே வேளை நேற்றுப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 5பெண்கள் உட்பட 20ற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் 30ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கின்றனர். இன்று காலை 7.00மணிமுதல் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இத் தாக்குதலுக்கு அஞ்சி 7000ற்கும் அதிகமான பொதுமக்கள் வாகரை மருத்துவமனையில் தஞ்சம் புகுந்திருந்தனர். நேற்று படையினரால் கொல்லப்பட்ட மூன்று அப்பாவிப் பொதுமக்களின் உடலங்கள் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களால் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.