Friday, December 08, 2006

சிங்கள காடையர்களால் தமிழ் - முஸ்லீம் சமூகங்களின்..

சிங்கள காடையர்களால் தமிழ் - முஸ்லீம் சமூகங்களின் நிலங்கள் அபகரிப்பு பாலாவிப் பகுதியில், தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான காணிகளை சிங்கள காடையர்கள் ஆக்கிரமித்து தற்போது குடியேற்றங்களை அமைத்து வருகின்றனர். இதற்கு சிறீலங்கா காவல்துறையினர் முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கிவருவதாக முஸ்லீம் சமூக தலைவர்கள் குற்றம் சுமத்தியுள்ளார்கள். இதேவேளை இவ் ஆக்கிரமிப்புக்கெதிராக இன்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக, ஜும்மா தொழுகையை தொடர்ந்து முஸ்லீம் மக்களால் பெரும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான முஸ்லீம் மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.