ஏ-9, ஏ-15 நெடுஞ்காலை நிரந்தரமாக திறக்க விடுதலைப் புலிகள் வலியுறுத்தல் இன்று நோர்வேயின் சமாதான தூதுவர் விடுதலைப்புலிகளை சந்தித்தமை தொடர்பில் விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இராசையா இளந்திரையன் அவர்கள் ஏ.பி செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் யாழ்குடாநாட்டுக்கான ஏ-9 நெடுஞ்சாலையையும், மட்டக்களப்பு ஏ-15 நெடுஞ்சாலையையும் சிறீலங்கா அரசு திறந்துவிட வேண்டும் என நோர்வே சிறிப்புத்தூதுவரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார். இதேவேளை பலதரப்பட்ட விடயங்களில் விடுதலைப்புலிகளின் நிலைப்பாடும் நோர்வேதரப்புக்கு எடுத்து விளக்கப்பட்டதாக ஏ.பி சேவைக்கு தெரிவித்திருந்தார்





