Tuesday, December 19, 2006

கடந்த இரு வாரத்தில் 72 பொதுமக்கள் படுகொலை

கடந்த இரு வாரத்தில் 72 பொதுமக்கள் படுகொலை - விடுதலைப் புலிகள் டிசம்பர் மாதம் முதல் இருவாரத்தில் சிறீலங்காப் படையினரால் 72 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இது குறித்து விடுதலைப் புலிகளின் சமாதான செயலகம் விடுத்திருக்கும் அறிக்கையில்: சிறீலங்கா படையினர் மற்றும் துணை ஆயுதக் குழுவினரின் நேரடியான தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஏனைய 41 பேரும் திருமலை வாகரையில் சிறீலங்காப் படையினர் ஏவிய எறிகணைத் தாக்குதலிலும் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இருவாரத்திலும் 21 தமிழ் மக்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளதாகவும் இவர்களில் 13 பேர் யாழ் குடாநாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.